'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Tuesday, 16 June 2015

ஆன்ட்ராய்டு போன் வாங்க வேண்டுமா?

         உங்களில் சிலருக்கு போன் வாங்கும் போது குழப்பம் வரலாம் குறிப்பாக ஆன்ட்ராய்டு போன் வாங்குவதாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. எந்த போன் எதில் என்ன ஆப்சன் இருக்கின்றது இது போன்ற பிரச்சனை நிறையவே உள்ளது. இந்த குழப்பத்தை போக்கவே ஒரு இணையதளம் உள்ளது. அதில் உங்களுக்கு தேவையான ஆப்சன்களை தேர்வு செய்து அது சம்பத்தப்பட்ட போனை மட்டும் தேடித்தரும். இது உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன். கீழே உள்ள லிங்கிற்கு சென்று முயற்சித்து பாருங்கள்.

இங்கே அழுத்தவும் 
Read More

Thursday, 11 July 2013

விண்டோசில் copy வேலைகளை வேகமாக்க...

நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை ( Tera copy ) பயன்படுத்தி பாருங்கள்.  இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் 50 % வரை வேகம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த சாப்ட்வேரை 
கீழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து
பயன்படுத்துங்கள்.  .

இங்கே டவுன்லோட் செய்யவும்.
    Download
Read More

Trail version சாப்ட்வேரின் காலத்தை நீட்டிக்க...

சாப்ட்வேரை சோதனை பதிப்பாக வாங்குவோம். சில நாட்களில் அதற்கான நேரம் முடிந்ததும் ஒப்பன் ஆகாது.நாட்களை நீட்டிக்க (நேரத்தை நீட்டிக்க). இந்த சாப்ட்வேரை நாம் நமது கணிணியில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.1எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்காணும் விண்டோ ஓப்பன் ஆகும்.


உங்கள் கணிணியில் உள்ள trial version  சாப்ட்வேரின் .Exe பைலை  நீங்கள் தேர்வு செய்யுங்கள்.புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது பாருங்கள்.


தேவையான தேதியை தேர்வு செய்யுங்கள்.Enter a name for create desktop icon என்கின்ற விண்டோவில் ஒரு புதிய பெயரை சாப்ட்வேருக்கு நிறுவுங்கள். அடுத்து்ள்ள Create Desktop Short-cut  கிளிக் செய்யுங்கள் இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் சாப்ட்வேர் அமரந்துகொள்ளும். இப்போழுது நீங்கள் நீட்டிப்பு செய்த சாப்ட்வேரின் பழைய Desktop short cut.Startup முதலியவற்றை நீக்கி விடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த ஐ-கானை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு சாப்ட்வேர் தடையில்லாமல் வேலை செய்யும்.
பயன்படுத்திப்பாருங்கள்.



Read More

Sunday, 14 October 2012

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி ?

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்
Read More

உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள் !

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்.


SnapPea என்ற இலவச மென்பொருள் மூலம் Android போன்களில் செய்ய கூடிய பல வசதிகளை உங்கள் கணினியின் மூலமாகவே செய்யலாம். இந்த மென்பொருள் மூலம் செய்யகூடிய சில முக்கிய வசதிகளை இங்கு காண்போம்.

சில பயனுள்ள வசதிகள்:
  • உங்கள் கணினியில் உள்ள வீடியோ, போட்டோ மற்றும் பாடல்களை போனுக்கும், போனில் இருந்து கணினிக்கும் பரிமாறி கொள்ளலாம்.
  • போனில் உள்ள தொடர்பு எண்களை(Contacts) கணினியில் சேமிக்கலாம்.
  • லட்சகனக்கனா இலவச மென்பொருட்களை Google Play மற்றும் 1mobile apps தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  
  • கணினி மூலம் மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்வதால் உங்கள் மொபைல் data plan வீணாகாது.
  • கணினியில் இருந்தே மொபைலில் உள்ள எந்த எண்ணுக்கும் SMS அனுப்பலாம்.
  • உங்களின் iTunes library யை Android போனில் import செய்து கொள்ளலாம். இதிலுள்ள மேலும் பல வசதிகளை காண கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.


மென்பொருளை டவுன்லோட் செய்ய - SnapPea
Read More

Saturday, 1 September 2012

கூகுள் தேடுபொறியில் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்..

தேடியந்திரங்களில் யாரும் தொட முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது கூகுள் இணையதளம் ஆகும். மொபைல்களில் இன்டர்நெட் வசதி வந்த பிறகு கிராமங்களில் கணினியை உபயோகிக்காதவர்கள் கூட மொபைல் மூலம் கூகுளின் வசதியை அறிந்துள்ளனர். இவ்வளவு பேரையும் கவர்ந்திழுக்க காரணம் அதிலுள்ள வசதிகள்.

அதுமட்டுமில்லாமல் தேய்ந்து போன ரெக்கார்டை திரும்ப திரும்ப தேய்க்காமல் வாசகர்கள் பயன்பெறும் வகையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய வசதிகளை புகுத்தி வருவதே கூகுளின் சிறப்பு. அந்த வகையில் தற்பொழுது சில புதிய வசதிகளை கூகுள் தேடியந்திரந்தில் அறிமுக படுத்தி உள்ளனர். அவைகளை கீழே பார்ப்போம்.

1)Scientific Calculator :
கூகுள் தேடியந்திரத்தை வெறும் தேடு பொறியாக மட்டுமின்றி வேறு பல காரணங்களுக்கும் உபயோகிக்கலாம். அதில் முக்கியாமனது கால்குலேட்டர் வசதி. 1+1 என்னன்னு கேட்டால் உடனே சொல்லிடுவோம் 44646*545456 என்னெவென்று கேட்டால் உடனே நாம் தேடுவது கால்குலேட்டரை தான்.  மற்றும் ஏதேனும் மிகவும் கடினமான scientific கணிதங்களை போட Scientific Calculator இருந்தால் தான் போட முடியும்.  இனி இதற்க்காக எங்கும் அலைய வேண்டியதில்லை கூகுளில் Scientific Calculator வசதியை அறிமுக படுத்தி உள்ளனர்.

கூகுளை திறந்து சர்ச் பாரில் சாதரணமாக  1+1 டைப் செய்தால் அதற்க்கான விடை கீழே இருப்பதை போன்று scientific Calculator-ல் வந்திருப்பதை காணலாம்.

இதில் எவ்வளவு கடினமான கணிதங்களுக்கும் எளிதாக விடையை தெரிந்து கொள்ளலாம். மற்றும் இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதியும் இருப்பதால் 2+2 என சொன்னாலே அதற்க்கான விடையை அறிந்து கொள்ளலாம். 

இந்த கால்குலேட்டரின் உதவியுடன் நான் போட்ட சில சிக்கலான கணிதங்களை கீழே காணுங்கள்.



2) Unit Converter:
கால்குலேட்டர் வசதியோடு மற்றொரு பயனுள்ள வசதியையும் அளித்துள்ளது.   அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்டிற்கு மாற்ற உதவும் வசதியை கொடுத்ள்ளனர்.

அதாவது 1 டிகிரி செல்சியஸ் என்பது எத்தனை பாரன்ஹீட் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 10km என்பது எத்தனை மைல் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 1452 டன் என்பது எத்தனை கிலோ என தெரிய வேண்டுமா? அனைத்தையும் சுலபமாக கூகுள் தேடியந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம்.




இது போன்று அனைத்து அலகுகளையும் உங்களுக்கு தேவையானத்தில் மாற்றி கொள்ளலாம். 

இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். ஆகவே உங்களுக்கு மாணவர்களிடத்தில் இந்த வசதியை அறிமுக படுத்துங்கள். 
Read More

Wednesday, 15 August 2012

கூகுளின் புதிய நுழைவு பக்கம்(Multiple Login Page) ஆக்டிவேட் செய்ய ..


கூகுளில் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பார். ஒரே நேரத்தில் அனைத்து கணக்குகளையும் உபயோகிக்க கூகுள் வழங்கி உள்ள வசதி Multiple-sign in வசதி. இதை மேலும் சுலப படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய Multiple Accounts Login page வசதியை அறிமுக படுத்த இருக்கிறது.  இனி கூகுள் தளங்களின் நுழைவு பக்கத்தில் பல கூகுள் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். நுழைவு பக்கத்தில் நீங்கள் சேர்த்த அனைத்து கணக்குகளையும் காட்டும் அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்தால் அந்த கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஐடி பாஸ்வேர்ட் தர வேண்டிய அவசியமில்லை.


ஆக்டிவேட் செய்ய:
  • இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய முதலில் இந்த பக்கத்திற்கு சென்று அதில் உள்ள enable this feature என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
  • லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கு தேவையான மற்ற கூகுள் கணக்குகளை Add account கிளிக் செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு கணக்கில் உள் நுழையும் பொழுதும் Stay signed in என்ற கட்டத்தில் டிக் குறியிடுவது அவசியம்.
  • இதே போன்று உங்களின் அனைத்து கூகுள் கணக்குகளையும் சேர்து கொள்ளுங்கள். 
இனி ஒவ்வோரு முறையும் ஈமெயில் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. பொது கணினிகளில் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டாம்.
Read More
safdharge. Powered by Blogger.