சில நபிமொழித் துளி!!!
* ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தியவன் என்னைத் துன்புறுத்தியவனாவான். என்னைத் துன்புறுத்தியவன் இறைவனைத் துன்புறுத்தியவனாவான். அந்நிய மதத்தினரை துன்புறுத்தியவன் என்னை (முஹம்மதை) துன்புறுத்தியவனாவான்.
* திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் இல்லை.
* பெற்றோரைக் கொடுமைப்படுத்தியவர் எதுநாள் வரை என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லையோ, அதுநாள் வரை அவர் பாவிகளின் கூட்டத்திலேயே சேர்ந்திருப்பார்.
* வெண்மையான ஆடைகளை அணியுங்கள். வெண்மையான ஆடை சிறந்ததாகும். அதனை மரணித்தவர்களுக்கு கபன் ஆடையாக அணிவியுங்கள்.
* சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோர்களாகும். அவர்களுக்கு நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும்.
* ஒருவன் தன் தந்தை மரணித்தபின் அவருடைய நண்பர்களுடன் உறவுகொள்வதே சிறந்த செயலாகும்.
* உங்கள் குழந்தைகளை முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி உண்டு.
* உங்கள் குழந்தைகளை சங்கைப்படுத்துங்கள். குழந்தைகளைச் சங்கைப்படுத்துவது ஒரு வணக்கம்.
* ஒருவன் தனது பிள்ளைகளுக்கு தனது சொத்தில் அவர்களுக்குரிய பங்கைக் கொடுக்கவில்லையானால், அவர்களை பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி விடக்கூடிய நிலையில் ஆக்கினால் தீர்ப்புநாளில் அல்லாஹ் சுவர்க்கத்தில் அவருக்குரிய பங்கை நஷ்டப்படுத்தி விடுவான்.
* வயது வந்த பெற்றோர்களில் (தாய் தந்தை இருவரில்) ஒருவர் இருந்து அவருக்கு (பிள்ளைகள்) செலவு செய்யவில்லையானால் அவர்கள் சொர்க்கம் நுழைய முடியாது.
* பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து உண்டாகட்டும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப் படுத்துவனாக. ஆமீன்.
----------------------------------
உயர்ந்த நான்கு விஷயங்கள்!!
""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத "துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,'' :(நபி மொழி)
----------------------------
பெற்றோரை பற்றி...
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
* எவன் ஒருவன் தன் தந்தையின் பக்கம் வெறுப்பான பார்வையைச் செலுத்துவானோ அவன் பெற்றோருக்கு அடி பணிந்தவனாக மாட்டான்.
* உமது தந்தைக்கு முன்பாக நீர் நடக்காதீர். அவர் உட்காருவதற்கு முன் நீர் உட்காராதீர். அவருடைய பெயரைச் சொல்லி அழைக்காதீர். மேலும், அவரைப் பற்றி எவரிடமும் குறை சொல்லித் திரியாதீர்.
* வயது வந்த பெற்றோர்களுக்கு (தாய் தந்தை இருவரில்) ஒருவர் இருந்து அவருக்கு (பிள்ளைகள்) செலவு செய்யவில்லையானால், அவர்கள் சுவர்க்கம் நுழைய முடியாது.
* பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து உண்டாகட்டும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக. ஆமீன்.
* பெற்றோரை (மனம் நோகச் செய்து) அவர்களை அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவமாகும், தண்டனைக்குரியதாகும்.
* பெற்றோரை துன்புறுத்திய ஒருவன் மன்னிப்புக்கேளாமல் இறந்து விடுவானாயின், கியாமநாளில் அவன் குஷ்டரோகியாக எழுப்பப்படுவான்.
* பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பைச் செலுத்துவது கட்டாயக் கடமையாகும். :(நபி மொழி)
safdharge. Powered by Blogger.








