'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Tuesday, 20 December 2011

அண்டம் எப்படி விரிவடைகிறது? - நோபெல் பரிசு 2011 !

இந்த உலகத்தின் முடிவு நெருப்பால் தான் என்பது சிலருடைய கருத்தாகவும்,இல்லை உறை நிலையில் தான் என்பது சிலருடைய கருத்தாகவும் இருக்கிறது .ஆனால் இந்த பிரபஞ்சத்தின் உண்மையான விதி , அது உறை நிலையாக மாறும் என்பதே நோபெல் பரிசு பெற்றிருப்பவர்களின் கருத்து .
அவர்கள் மிகத்தொலைவில் உள்ள பால் வீதியில் சூப்பர் நோவா எனப்படும் வெடிப்புக்கு உள்ளாகும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக அவதானித்து இந்த அண்டம் விரிவடையும் வேகம் அதிகரித்து வருகிறது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் .
இந்த கண்டுபிடிப்பு அவர்களுக்கே பெரும் அதிர்ச்சியை தந்தது . அவர்களின் அதிர்ச்சிக்கான காரணத்தை இலகுவாக விளக்குவதானால், உதாரணமாக ஒரு பந்தை மேலே எறிந்தால் புவியீர்ப்பு விசையால் கீழே வந்து சேரும் . ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு கிட்டத்தட்ட ஒரு பந்தை மேலே எறிந்து விட்டு ,புவியீர்ப்பு விசையால் அதன் திசையை கூட மாற்ற முடியாமல் அது இன்னும் இன்னும் மேலே போய் காணாமல் போகும் நிகழ்வை அவதானிப்பதை போல இருந்திருக்கும் .
கிட்டத்தட்ட இதே நிகழ்வு தான் எமது அண்டத்திலும் நிகழ்கிறது .
இந்த அண்டத்தின் விரிவடையும் போக்கின் அடிப்படையை பார்த்தால் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியால் வெளிநோக்கி தள்ளப்படுகிறது என்பது தெரிகிறது .இந்த பிரபஞ்சத்தின் 70 % கண்ணுக்கு தெரியாத சக்தி எனப்படும் Dark energy யால் ஆனது . இதுவரை காலமும் இயற்பியலில் புரியாத புதிராக இருந்து வருவது இதுவே .
1998 இல் இரு ஆராய்ச்சி அணிகளும் ஒரே முடிவை முன் வைத்த போது அண்டப் படைப்பு கோட்பாடு(cosmology) கொஞ்சம் ஆட்டம் கண்டது எனலாம்
Read More

அலெக்சாண்டர் பிளெமிங்-ஒரு பக்க வரலாறு !

அலெக்சாண்டர் பிளெமிங்,பென்சிலின் என்ற நோய் எதிர்ப்பு (Antibiotic )மருந்தை கண்டுபிடித்தார்.இரண்டாம் உலகப்போரின் போது ஆயிரம் உயிர்களை இவரது மருந்து காப்பாற்றியது .
1906 இல் லண்டனில் படிப்பினை முடித்த பிளெமிங் ,இராணுவ வைத்திய குழுமத்தில் (Army Medical corporation ) இல் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார் . முதலாம் உலகப்போருக்கு பிறகு லண்டனில் இருந்த சென் மேரீஸ்(St .Mary 's)மருத்துவ கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தார்.
பிளெமிங் இன் மூத்த சகோதரர் மருத்துவர் தான் தம்பியும் தன்னைப்போல மருத்துவர் ஆக வேண்டும் என்று அவர் ஆசைபட்டார் .பிளெமிங் ஆராய்ச்சி துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் மருத்துவ படிப்பு படிக்கவில்லை .
1928 ஆம் ஆண்டு பிளெமிங் தனது ஆராய்ச்சி கூடத்தில் பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார் . ஆனால் ,எல்லா ஆராய்ச்சியும் குழப்பமாகவே இருந்து வந்தன .ஒரு முறை பிளெமிங் நெடுநாள் வெளியூருக்கு பயணம் சென்று தன்னுடைய ஆராய்ச்சி கூடத்திற்கு வந்தார் . அங்கு இருந்த உணவுப் பொருட்களில் காளான் வந்திருந்தது . இந்த காளான்கள் உணவு பொருட்களை சேதப்படுத்தியதை உணர்ந்தார் . காளான்கள் படிந்திருந்த உணவுப்பொருட்களை தனியாக எடுத்தார் . காளான் பாதிக்கபடாத உணவுப்பொருட்களை தனியாக ஆராய்ச்சி செய்து பார்த்தார் .அதில் பென்சீலியம் என்ற பக்டீரியாக்கள் இருந்தது. பென்சிலீயம் பக்டீரியாக்கள் இருந்ததால் இந்த உணவுப்பொருட்களை சேதப்படுத்த முடியவில்லை என்று உணர்ந்த ப்ளேமிங்குக்கு காளான்கள் வளர்ச்சியை தடுக்க பென்சிலின் பாக்டீரியாக்களை உருவாக்கினார் .தான் கண்டுபிடித்த மருந்தின் பெயரை பென்சிலின் என்று பெயர் வைத்தார் .மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு பென்சிலின் உதவியது .
1945 இல் அலெக்சாந்தர் பிளெமிங் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கபட்டார் .இவருடைய பென்சிலின் மருந்தின் அடிப்படையில் ஐசோ லேட் பென்சிலின் என்ற மருந்தும் கண்டுபிடிக்க உதவியது.
தன் கண்டுபிடிப்பால் பல உயிர்களை வாழவைத்த அலெக்சாண்டர் பிளெமிங் தனது 73 வயதில் காலமானார் .
அலெக்சாண்டர் பிளெமிங் கண்டுபிடித்த பென்சிலின் இன்று பல அறிய மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக உள்ளது . அவர் கண்டுபிடித்த பென்சிலின் மருந்து பல கோடி உயிர்களை இன்னும் காப்பாற்றிகொண்டிருக்கிறது .

Read More

Friday, 16 December 2011

தாடி வளர்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம் !

இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435


மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. 

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)


ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வன்னம் படைத்திருப்பான். 


தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. 


விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் 

பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார். 



1.முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன் 

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது. 

Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும். 

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். 

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது. 

நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”. 

முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். 

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர். 

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது. 

ஆதாரம்: புஹாரி 5923

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது. அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!.


.நன்றி:(FB)-ஜெகதா பட்டினம்
Read More

பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே!!


இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், சர்ச்சையைக் கிளப்பியதும், இதுவரை பேஸ்புக்கினால் மேற்கொள்ளப்பட்டதுமான 'டைம்லைன்' வசதி நேற்று முதல் அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.


இதனை https://www.facebook.com/about/timeline என்ற முகவரியில் சென்று பெற்றுக்கொள்ள முடியும். கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ' Get Timeline ' பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும். 




பாவனையாளர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ 'டைம்லைனு'க்கேற்ப உங்களது புரொஃபைல் மாற்றமடைந்தே தீரும்.

பேஸ்புக்கில் உங்களது அனைத்து நடவடிக்கைகளும் காலத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படும்.

தற்போது 'டைம்லைனை' பெற்றுக்கொள்ளும் போது உங்களுக்கு 7 நாட்கள் (Grace Period​) அவகாசம் கிடைக்கின்றது. அதாவது டிசம்பர் 22 ஆம் திகதி வரை. இக்காலப்பகுதியில் உங்கள் புரொஃபைல் டைம்லைனிற்கேற்ப மாற்றமடைந்த போதிலும் மற்றைய பாவனையாளர்கள் இதனைப் பார்வையிட முடியாது.

காரணம் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Publish Now என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே மற்றவர்கள் அதனைப் பார்வையிட முடியும். எனினும் இது 22 ஆம் திகதி வரை மட்டுமே.



எனவே பாவனையாளர்கள் தங்களது டைம்லைன் புரொஃபைலில் உங்களுக்குத் தேவையானவற்றை விட்டுவிட்டு மற்றவைகளை அழித்து விடவோ அல்லது டைம்லைனில் இருந்து மறைத்து வைக்கவோ முடியும். இதற்குப் பின்னரே ' Publish Now' வினைக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். 



இது இம்மாதம் 22 ஆம் திகதி வரை மட்டுமே. அதற்குப் பின்னர் உங்கள் டைம்லைன் புரொஃபைலினை அனைவரும் பார்வையிடக் கூடியதாக இருக்கும். எனவே இத்திகதிக்கு முன் அனைவரும் தங்களது அந்தரங்கத் தகவல்கள் வெளியே கசிய விடாமல் பாதுகாப்பதே இலகுவழியாகும்.
Read More

Sunday, 11 December 2011

பணத்தை எண்ணுவதற்கு ?!!


ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..?

வங்கிகள் என்றால் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அது சாத்தியமில்லாத விஷயம். உங்களின் இந்தக் கவலையைப் போக்கத்தான் வந்திருக்கிறது பணத்தை எண்ணும் மோதிரமான 'கவுன்ட்டிங் ரிங்’.

இந்த கவுன்ட்டிங் ரிங்கை உங்கள் கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் சுவிட்சை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்து குறித்துக் கொண்ட பிறகு, டிஸ்பிளேயை மீண்டும் 'ரீசெட்’ செய்து கொள்ளலாம்.

இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் விசேஷமான அம்சம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுன்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

Read More

Saturday, 10 December 2011

office-ல் Facebook கை "Excel" வடிவில் பயன்படுத்துவது எப்படி...?


பல நிறுவனங்கள் பேஸ்புக்கை தடை செய்துள்ளன .ஆனாலும் வேலைத்தளத்தில் இருப்பவர்கள் சமூக இணையத்தளங்களை பார்ப்பது அதிகம் .இதனை நிவர்த்தி செய்யவே இந்த அப்பிளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது .

இந்த hardlywork.in என்ற அப்ப்ளிகேஷன் பேஸ்புக் தகவல்களை அப்படியே Excel sheet க்கு மாற்றி உங்களுக்கு வழங்குகிறது .

"வேலை தளத்தில் பேஸ்புக் பார்ப்பது ஒரு வித தயக்கத்தை உண்டாக்கினால் அல்லது யாராவது பார்த்துவிடுவார்கள் என்று எண்ணினால் அதனை எக்செல் வடிவில் வேலை செய்வது போல பயன்படுத்தலாம் .

முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கினுள் நுழைந்துகொண்டு harldywork.in  கிளிக் செய்தவுடன் இப்படியொரு முகப்பு கிடைக்கப்பெறும் .


இதில் Gimmedem spreadsheets ஐ அழுத்தவும் .
அதனை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு சிறிய அறிமுகம் கிடைக்கும் .

Excelsheet இல் எழுத்துவடிவில் மாற்றும் பகுதியில் உங்கள் நண்பர்களை தேடி அவர்களின் ப்ரோபாயிலை பார்க்கலாம். Search friends பகுதி



எப்படியும் உங்கள் முகாமையாளர் கண்டுபிடித்துவிடுவார் என்றால் இதில் Spacebar ஐ மட்டும் அழுத்தினால் போதும் முழுவதும் இலக்கங்களால் ஆன  கணக்கு போல மாறிவிடும் . 


இதனை உருவாக்கிய யாலே பல்கலைகழகத்தை சேர்ந்த பி குறோஸ் ஐ கேட்ட போது தன்னிடம் தனது நண்பி பேஸ்புக்கை  வேலைத்தளத்தில் பார்க்கமுடியவில்லை என்று முறையிட்ட பின்பே இதனை உருவாகக் வேண்டுமென்று தனக்கு தோன்றியதாக கூறினார் .
Read More

ஹஜ்ஜுக்கு செல்ல விரும்புவோர் கவனத்திற்கு 2012


2012 ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்ட் இல்லாமல் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. இது குறித்து இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

2012 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் செய்பவர்கள் = விண்ணப்பம் செய்யும்போதே பாஸ்போர்ட் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும். இது சிறுவர் மற்றும் கைக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.

ஹஜ் விண்ணப்பம் சமர்பிக்கும் போதே பாஸ்போர்ட்டும் (அசல்) இணைத்து சமர்பிக்கப்பட வேண்டும். ஆகவே வரும் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள நாடியுள்ளோர் உடனடியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்து தயார் நிலையில் இருக்கும் படி கேட்டுகொள்கிறோம். 2012 ஆம் ஆண்டுக்கான ஹஜ் அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி மாதம் வெளிவரும்.

மேலும் தங்களின் பாஸ்போர்ட் குறைந்தது மார்ச் 31, 2013 வரை செல்லுப்படியானதாக இருக்கவேண்டும்.
Read More

Monday, 28 November 2011

பேஸ்புக் கணக்கை ஒரு ஐடியில் இருந்து வேறொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது எப்படி?



கூகுள் சேவைகளுக்கு அடுத்தப்படியாக வந்தேமாதரத்தில் அதிக இடுகைகள் இந்த பேஸ்புக் தளத்தை பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவு பல்வேறு வசதிகள் சமூக இணையதளமான பேஸ்புக்கில் உள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியில் ஓபன் செய்து விடுகின்றனர். ஆதலால் அவர்களின் ஈமெயில் ஐடிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான ஈமெயில் அறிவிப்புகள் வருவதால் முக்கியமான ஈமெயில்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. அல்லது உங்களின் பெர்சனல் ஈமெயில் தெரிந்து விடுவதால் அந்த ஐடியை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது. ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது என பார்க்கலாம்.

  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் Email பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  • அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும். 
  • இப்பொழுது வரும் விண்டோவில் உங்களின் புதிய ஈமெயில் ஐடியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 
  • மேலே உள்ள படத்தில் உள்ளது போல சரியாக கொடுத்து Save Changes என்ற பட்டனலை அழுத்தியவுடன் உங்களின் புதிய ஈமெயில் ஐடிக்கு Activation link செய்தி அனுப்ப பட்டதற்கான அறிவிப்பு வரும். 
  • உங்களின் ஈமெயில் ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய ஈமெயில் ஐடி பேஸ்புக்கில் சேர்ந்து விடும்.
  • மறுபடியும் Account Settings - Email - Edit பகுதிக்கு சென்று புதிய ஈமெயிலை தேர்வு செய்து பேஸ்புக் பாஸ்வேர்ட் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும். 
  • இப்பொழுது மறுபடியும் அதே Email - Edit பகுதிக்கு சென்று பழைய ஈமெயில் அடிக்கு நேராக உள்ள Remove என்ற லிங்க் அழுத்தி கீழே பாஸ்வேர்ட் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய ஈமெயில் ஐடி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும்.

இனி நீங்கள் புதிய ஈமெயிலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியையும் பாதுகாக்கலாம்.

டிஸ்கி: நண்பர் ஒருவர் நேற்று மொபைலில் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்டதால் இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும் என்பதால்.
Read More

Friday, 25 November 2011

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா.?


உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.
Read More

லைசன்ஸ் கீயுடன் அனைத்து மென்பொருட்களும் இலவசம்!


சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தரவிறக்க வேண்டும்.ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும் அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம். புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து free ware Application  பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம். இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.ஆனால் இந்தத் தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.
no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,magazine, tamil magazine, gallery,india,Tamilnadu,Politics,Cinema,Astrology,Tamil Video,tamil news, tamil nadu news, tamilnadu politics online tamil news, tn politics, world news, sri lanka, Indian politics, India, Sports, Online shopping, sri lanka, சினிமா, ஜோதிடம், ஆன்மிகம், சமையல் கலை, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, இலக்கியம்,Todays Latest News, Photo Gallery, Politics, Cinema, Tamil Magazine, Webtv, Cinema News,Cine Hot Bits, Hot bits, Tamil Cinema Bits, Gosspies, Polls, Tamil movies, Tamil Cinema, Tamil Film, Kollywood, Tamil news, Tamil songs, Tamil actors, Tamil actress, Tamil movie news, Tamil movie reviews, interviews,Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil Movie latest news, Tamil comedy movies, actor, actresses, Kollywood latest events, Tamil Nadu, Chennai City Information, Tamil songs, Latest Tamil Movies, Raasipalan, Jothidam, Astrology, Raasi, Kitchen Special, Food Festival,Ladies Special, Womans Special, Tamil New Year, Diwalai Special, Deepavalai, Political Interviews, Srilankan News, Indian Politics, Daily News in Tamil Nadu, Tamil Nadu News, Cinema Special, Tamil Cinema Special, Web Tv Tamil News, Web TV English News, Magazine Subscription, Online Shopping, Online purchase, Special News, Headline News, Headlines, News in Headlines, Latest Updates, Political Cartoon, Raagu Kalam, Emakandam, Nalla Neram, GYM, Actress Gym, Photo Gallery, Cinema Photo Gallery, Cine Stars Interviews,Movie Shooting Spot, AMR, Temples, Hindu Temples, Picture of the day, Crossword Puzzle, Games, Daily Horoscope, Hotest News,Gold Rates, Silver Rates, Tamil Magazine, Weekly magazine, Tamil weekly Magazine, Important political Function, Online News, Currency, International Tamil News, Share Market, Share detials, Latest Cinema News in Tamil, Tamil Cinema Songs, Tamil Cinema News, Tamil Cinema hot actress, tamil cinema images, gossips of tamil cinema,செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோ,E-magazine,Tidle park,Short
கீழே உள்ள link மூலம் நீங்கள் தேவையான பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யலாம். http://www.freenew.net/
Read More

இனி சாப்பாடு தேவையில்லை : பசியைப்போக்கும் சுவிங்கம் கண்டுபிடிப்பு!


பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம்மை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இறுதிகட்ட சோதனைக்கு பிறகு இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினர். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள சிராகியூஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் டாயல் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
இதுபற்றி டாயல் கூறியதாவது:
 பசித்ததும் சாப்பிடுகிறோம். உடலுக்கு தேவையான அளவு உணவு கிடைத்த பிறகு, ‘பெப்டைட் ஒய்ஒய்’   என்ற ஹார்மோன் உருவாகி, நமது ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இந்த ஹார்மோன் உருவானால், பசி அடங்கிய உணர்வு ஏற்படுகிறது. அதிகம் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் இந்த ஹார்மோன் அளவு குறைவாக இருக்கிறது. பசி அடங்கிய உணர்வு ஏற்படாமல்தான் நிறைய சாப்பிட்டு குண்டாகின்றனர்.

 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,magazine, tamil magazine, gallery,india,Tamilnadu,Politics,Cinema,Astrology,Tamil Video,tamil news, tamil nadu news, tamilnadu politics online tamil news, tn politics, world news, sri lanka, Indian politics, India, Sports, Online shopping, sri lanka, சினிமா, ஜோதிடம், ஆன்மிகம், சமையல் கலை, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, இலக்கியம்,Todays Latest News, Photo Gallery, Politics, Cinema, Tamil Magazine, Webtv, Cinema News,Cine Hot Bits, Hot bits, Tamil Cinema Bits, Gosspies, Polls, Tamil movies, Tamil Cinema, Tamil Film, Kollywood, Tamil news, Tamil songs, Tamil actors, Tamil actress, Tamil movie news, Tamil movie reviews, interviews,Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil Movie latest news, Tamil comedy movies, actor, actresses, Kollywood latest events, Tamil Nadu, Chennai City Information, Tamil songs, Latest Tamil Movies, Raasipalan, Jothidam, Astrology, Raasi, Kitchen Special, Food Festival,Ladies Special, Womans Special, Tamil New Year, Diwalai Special, Deepavalai, Political Interviews, Srilankan News, Indian Politics, Daily News in Tamil Nadu, Tamil Nadu News, Cinema Special, Tamil Cinema Special, Web Tv Tamil News, Web TV English News, Magazine Subscription, Online Shopping, Online purchase, Special News, Headline News, Headlines, News in Headlines, Latest Updates, Political Cartoon, Raagu Kalam, Emakandam, Nalla Neram, GYM, Actress Gym, Photo Gallery, Cinema Photo Gallery, Cine Stars Interviews,Movie Shooting Spot, AMR, Temples, Hindu Temples, Picture of the day, Crossword Puzzle, Games, Daily Horoscope, Hotest News,Gold Rates, Silver Rates, Tamil Magazine, Weekly magazine, Tamil weekly Magazine, Important political Function, Online News, Currency, International Tamil News, Share Market, Share detials, Latest Cinema News in Tamil, Tamil Cinema Songs, Tamil Cinema News, Tamil Cinema hot actress, tamil cinema images, gossips of tamil cinema,செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோ,E-magazine,Tidle

சர்க்கரை நோயாளி களுக்கு இன்சுலின் ஏற்றுவதுபோல, இந்த ஹார்மோனையும் செயற்கையாக உடலில் ஏற்றினால், அவர்களுக்கும் சீக்கிரமே பசி அடங்கும். உடம்பு குண்டாகாது. ஊசி வழியாக செலுத்தாமல், உணவு போல வாய் வழியாகவே இதை கொண்டு சென்றால்தான் பக்கவிளைவுகள் இருக்காது. பிஒய்ஒய் ஹார்மோனை மட்டும் செலுத்தினால், வயிறு அதை செரித்துவிடும். எனவே, பி12 வைட்டமினுடன் சேர்த்து அனுப்ப வேண்டும். பி12 மற்றும் பிஒய்ஒய் இரண்டையும் இணைத்து சூயிங்கம் வடிவில் கொண்டு வரும் ஆராய்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சாப்பிட்டவுடன் இந்த சூயிங்கம்மை மெல்ல வேண்டும். 3 முதல் 4 மணி நேரத்தில் ரத்த ஓட்டத்தில் பிஒய்ஒய் ஹார்மோன் கலக்கும். வயிறு நிறைந்திருக்கிற உணர்வு வெகு நேரம் வரை நீடிக்கும். அதாவது, வெகு நேரம் வரை பசிக்காது.
Read More

Thursday, 24 November 2011

இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள் 2011 !



தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும். 


பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iTunes இணையதளமாகும். பத்தாவது இடம் என்றவுடன் சாதாரணமா நினைச்சிடாதிங்க இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$ இந்தியமதிப்பில் Rs. 3130 ரூபாய். ஆண்டிற்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் வருகிறது.
9. Paypal
ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணம் பணம் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணையதளமாகும். இந்த தளம் வினாடிக்கு 91.90$ ஆண்டிற்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது. 
பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்று தருகிறது. இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும். இந்த தளத்தின் உரிமையாளர் Mark schroeder என்பவர். 
Expedia
7. AOL
இந்த தளம் இணையத்தில் பல்வேறு தலைப்புகளில் லேட்டஸ்ட் செய்திகளை பகிரும் தளமாகும். அலேக்சாவில் 61 வது இடத்தை பிடித்துள்ள தளமாகும். இந்த தளத்தின் உரிமையாளர் எரிக பிரின்ஸ் என்பவர். இந்த தளம் வினாடிக்கு 99.41$ ஆண்டிற்கு $3,137,100,000 வருமானமும் தளத்தின் உரிமையாளருக்கு பெற்று தருகிறது.

இதுவும் ஆன்லைனில் செய்தி பகிரும் தளமாகும். இதன் உரிமையாளர் மார்சல் வாஸ் என்பவர். வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டிற்கு $ 3,400,000,000 வருமானமும் பெற்று தருகிறது. 
Reuters
5. Yahoo
இந்த தளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான தளமாகும். News, Search, mail என பல்வேறு வசதிகளை கொண்டது. அலேக்சாவில் 4 இடத்தில் உள்ளது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.
yahoo
4. ebay
Amazon தளத்தை போன்று இதுவும் ஆன்லைனி பொருட்களை வாங்க உதவும் இணையதளமாகும். இந்த தளத்தின் உரிமையாளர் Pierre Omidyar என்பவர். வினாடிக்கு 276.56$ ஆண்டிற்கு $8,727,360,000 சம்பாதிக்கிறது. 
ebay
3. Comcast
அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.
comcast
2. Google
அப்பாடா நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த தளம் வந்துவிட்டது. இதனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இணையத்தின் நாடித்துடிப்பு இந்த தளம் ஒரு நாளைக்கு இதன் சேவை நிறுத்தப்பட்டால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். கூகுளின் ஒரு வருடத்திற்கு வருமானம் $23,650,560,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $749.46 ஆகும். இந்திய மதிப்பில் Rs. 38971(இப்பவே கண்ண கட்டுதே) ஆகும். 
Google search engine
1. Amazon
வெற்றிகரமாக முதல் இடத்திற்கு வந்தாச்சு. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் தளமாகும். கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின் வாசகர் வரத்து , அலெக்சா மதிப்பு அனைத்தும் குறைவு தான் ஆனால் பொருட்களை வாங்க மொத்த சந்தையாக இந்த தளம் உள்ளதால் தான் கூகுளை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறது.
Amazon

என்னடா ஏதோ மிஸ் ஆகுதேன்னு பாக்குறீங்களா!! பெரும்பாலானவர்களின் விருப்பமான அலேக்சாவில் 2 இடத்தில் உள்ள பேஸ்புக் தளத்தை பட்டியலில் காணவில்லையே என யோசிக்கிறீங்களா?

கூகுளையே ஆட்டி வைத்த பேஸ்புக் தளம் இல்லையே என்பது எல்லோருக்கும் வரக்கூடிய சந்தேகம் தான் ஆனால் அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் 16 வது இடத்தை பிடித்துள்ளது. அந்த தளத்தின் ஆண்டு வருமானம் $1,000,000,000 வினாடிக்கு $31.69 வருமானம் ஈட்டுகிறது. 
Read More
safdharge. Powered by Blogger.