'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Sunday, 14 October 2012

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி ?

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்
Read More

உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள் !

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்.


SnapPea என்ற இலவச மென்பொருள் மூலம் Android போன்களில் செய்ய கூடிய பல வசதிகளை உங்கள் கணினியின் மூலமாகவே செய்யலாம். இந்த மென்பொருள் மூலம் செய்யகூடிய சில முக்கிய வசதிகளை இங்கு காண்போம்.

சில பயனுள்ள வசதிகள்:
  • உங்கள் கணினியில் உள்ள வீடியோ, போட்டோ மற்றும் பாடல்களை போனுக்கும், போனில் இருந்து கணினிக்கும் பரிமாறி கொள்ளலாம்.
  • போனில் உள்ள தொடர்பு எண்களை(Contacts) கணினியில் சேமிக்கலாம்.
  • லட்சகனக்கனா இலவச மென்பொருட்களை Google Play மற்றும் 1mobile apps தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  
  • கணினி மூலம் மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்வதால் உங்கள் மொபைல் data plan வீணாகாது.
  • கணினியில் இருந்தே மொபைலில் உள்ள எந்த எண்ணுக்கும் SMS அனுப்பலாம்.
  • உங்களின் iTunes library யை Android போனில் import செய்து கொள்ளலாம். இதிலுள்ள மேலும் பல வசதிகளை காண கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.


மென்பொருளை டவுன்லோட் செய்ய - SnapPea
Read More

Saturday, 1 September 2012

கூகுள் தேடுபொறியில் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்..

தேடியந்திரங்களில் யாரும் தொட முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது கூகுள் இணையதளம் ஆகும். மொபைல்களில் இன்டர்நெட் வசதி வந்த பிறகு கிராமங்களில் கணினியை உபயோகிக்காதவர்கள் கூட மொபைல் மூலம் கூகுளின் வசதியை அறிந்துள்ளனர். இவ்வளவு பேரையும் கவர்ந்திழுக்க காரணம் அதிலுள்ள வசதிகள்.

அதுமட்டுமில்லாமல் தேய்ந்து போன ரெக்கார்டை திரும்ப திரும்ப தேய்க்காமல் வாசகர்கள் பயன்பெறும் வகையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய வசதிகளை புகுத்தி வருவதே கூகுளின் சிறப்பு. அந்த வகையில் தற்பொழுது சில புதிய வசதிகளை கூகுள் தேடியந்திரந்தில் அறிமுக படுத்தி உள்ளனர். அவைகளை கீழே பார்ப்போம்.

1)Scientific Calculator :
கூகுள் தேடியந்திரத்தை வெறும் தேடு பொறியாக மட்டுமின்றி வேறு பல காரணங்களுக்கும் உபயோகிக்கலாம். அதில் முக்கியாமனது கால்குலேட்டர் வசதி. 1+1 என்னன்னு கேட்டால் உடனே சொல்லிடுவோம் 44646*545456 என்னெவென்று கேட்டால் உடனே நாம் தேடுவது கால்குலேட்டரை தான்.  மற்றும் ஏதேனும் மிகவும் கடினமான scientific கணிதங்களை போட Scientific Calculator இருந்தால் தான் போட முடியும்.  இனி இதற்க்காக எங்கும் அலைய வேண்டியதில்லை கூகுளில் Scientific Calculator வசதியை அறிமுக படுத்தி உள்ளனர்.

கூகுளை திறந்து சர்ச் பாரில் சாதரணமாக  1+1 டைப் செய்தால் அதற்க்கான விடை கீழே இருப்பதை போன்று scientific Calculator-ல் வந்திருப்பதை காணலாம்.

இதில் எவ்வளவு கடினமான கணிதங்களுக்கும் எளிதாக விடையை தெரிந்து கொள்ளலாம். மற்றும் இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதியும் இருப்பதால் 2+2 என சொன்னாலே அதற்க்கான விடையை அறிந்து கொள்ளலாம். 

இந்த கால்குலேட்டரின் உதவியுடன் நான் போட்ட சில சிக்கலான கணிதங்களை கீழே காணுங்கள்.



2) Unit Converter:
கால்குலேட்டர் வசதியோடு மற்றொரு பயனுள்ள வசதியையும் அளித்துள்ளது.   அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்டிற்கு மாற்ற உதவும் வசதியை கொடுத்ள்ளனர்.

அதாவது 1 டிகிரி செல்சியஸ் என்பது எத்தனை பாரன்ஹீட் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 10km என்பது எத்தனை மைல் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 1452 டன் என்பது எத்தனை கிலோ என தெரிய வேண்டுமா? அனைத்தையும் சுலபமாக கூகுள் தேடியந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம்.




இது போன்று அனைத்து அலகுகளையும் உங்களுக்கு தேவையானத்தில் மாற்றி கொள்ளலாம். 

இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். ஆகவே உங்களுக்கு மாணவர்களிடத்தில் இந்த வசதியை அறிமுக படுத்துங்கள். 
Read More

Wednesday, 15 August 2012

கூகுளின் புதிய நுழைவு பக்கம்(Multiple Login Page) ஆக்டிவேட் செய்ய ..


கூகுளில் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பார். ஒரே நேரத்தில் அனைத்து கணக்குகளையும் உபயோகிக்க கூகுள் வழங்கி உள்ள வசதி Multiple-sign in வசதி. இதை மேலும் சுலப படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய Multiple Accounts Login page வசதியை அறிமுக படுத்த இருக்கிறது.  இனி கூகுள் தளங்களின் நுழைவு பக்கத்தில் பல கூகுள் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். நுழைவு பக்கத்தில் நீங்கள் சேர்த்த அனைத்து கணக்குகளையும் காட்டும் அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்தால் அந்த கணக்கிற்குள் நுழைந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஐடி பாஸ்வேர்ட் தர வேண்டிய அவசியமில்லை.


ஆக்டிவேட் செய்ய:
  • இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய முதலில் இந்த பக்கத்திற்கு சென்று அதில் உள்ள enable this feature என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
  • லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கு தேவையான மற்ற கூகுள் கணக்குகளை Add account கிளிக் செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு கணக்கில் உள் நுழையும் பொழுதும் Stay signed in என்ற கட்டத்தில் டிக் குறியிடுவது அவசியம்.
  • இதே போன்று உங்களின் அனைத்து கூகுள் கணக்குகளையும் சேர்து கொள்ளுங்கள். 
இனி ஒவ்வோரு முறையும் ஈமெயில் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. பொது கணினிகளில் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டாம்.
Read More

ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இந்தியாவிற்கும்]


இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMS என்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.


அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.


இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Window ஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம். 
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இந்தியாவில் தற்பொழுது Aircel, Loop Mobile, Reliance, Tata DoCoMo, Tata indicom ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.

மற்ற நாடுகளில் சப்போர்ட் செய்யும் மொபைல் நிறுவனங்களை அறிய-Support Operators
Read More

ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத பைல் வகைகளின் பட்டியல் விவரங்களுடன்..




ஜிமெயிலில் 25MB அளவுடைய பைல்களை அட்டாச் செய்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக ஜிமெயில் நிறுவனம் சில பைல் வகைகளை தன் மூலம் அனுப்புவதை அனுமதிப்பதில்லை (உ-ம் .exe).  சுமார் இந்த பைல்வகைகளை Zip செய்து அனுப்பினாலும் சரியாக கண்டறிந்து தடுத்து விடும். 


அது போன்று ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத 29 பைல்வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

ExtensionTypeDeveloper
.ADEAccess ProjectMicrosoft
.ADPAccess ProjectMicrosoft
.BATDOS batch fileMicrosoft
.CHMHTML Help fileMicrosoft
.CMDWindows CommandMicrosoft
.COMDOS Command FileN / A
.CPLWindows Control PanelMicrosoft
.EXEWindows Executable FileMicrosoft
.HTAHTML ApplicationMicrosoft
.INSInternet Settings FileMicrosoft
.ISPIIS Internet Provider settingsMicrosoft
.JSEJScript Encoded FileMicrosoft
.LIBGeneric Data LibraryN/A
.MDECompiled Access Add-inMicrosoft
.MSCConsole Snap-in Control Microsoft
.MSPWindows Installer PatchMicrosoft
.MSTInstaller Setup TransformMicrosoft
.PIFProgram Information FileN/A
.SCRWindows ScreensaverMicrosoft
.SCTScitex Continuous Tone FileScitex
.SHBWindows Document ShortcutMicrsoft
.SYSWindows System FileMicrosoft
.VBVBScript FileMicrosoft
.VBEVBScript Encoded Script FileMicrosoft
.VBSVBScript FileMicrosoft
.VXDVirtual Device DriverN/A
.WSCWindows Script ComponentMicrosoft
.WSFWindows Script FileMicrosoft
.WSHWindows Script Host SettingsMicrosoft

இந்த பட்டியலில் உள்ள ஒரு சில பைல்வகைகளை File type Rename செய்து அனுப்பினால் ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். உதாரணமாக .exe என்பதை .jpg என்று மாற்றி மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். உங்களின் நண்பர் அதை பழையபடி .exe மாற்றி விட்டால் போதும் அந்த மென்பொருளை உபயோகித்து கொள்ளலாம். 
Read More

2011ல் யூடியூபில் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட Top 10 வீடியோக்கள் - Youtube Rewind 2011



வீடியோக்களின் களஞ்சியமான யூடியுப் தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்களை வாசகர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அதே சமயம் தினமும் ஆயிரக்கணக்கான புதிய வீடியோக்களும் யூடியூபில் அப்லோட் செய்யப்படுகிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் தான் வாசகர்களிடையே அதிக வரவேற்ப்பை பெறுகிறது (நம்ம கொலைவெறி டி பாடல் போல). உலகம் முழுவதும் யூடியுப் தளத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த Top10 வீடியோக்களின் பட்டியலை(Youtube Rewind) கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 வீடியோக்கள் என்னென்ன என்று கீழே பார்ப்போம்.



உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட Top10 வீடியோக்கள்:
  1. Rebecca Black - Friday
  2. Ultimate Dog Tease
  3. Jack Sparrow (ft. Michael Bolton)
  4. Talking Twin Babies
  5. Nyan Cat [original]
  6. Look At Me Now
  7. The Creep
  8. Maria Aragon - Born This Way
  9. The Force
  10. Cat Mom Hugs Baby Kitten
இந்தியாவில் அதிகமானோர் பார்த்த Top10 வீடியோக்கள்
இந்த Top10 பட்டியலை பற்றி யூடியுப் நிறுவனம் வெளியிட்ட வீடியோவை கீழே பாருங்கள்.




இதர செய்தி:

மிக வேகமாக வளர்ச்சி அடைந்த(Fastest Rising music video of the year) வீடியோவாக வொய் திஸ் கொலைவெறி டி பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியிட்ட ஒரு மாதத்தில் 25மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது.
Read More

மவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க [பிரவுசர் ட்ரிக்ஸ்]

ஒவ்வொரு இணைய பக்கங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக  மற்ற பதிவுகளின் லிங்க் கொடுத்து இருப்பர். மவுஸின் மூலம் அந்த லிங்கை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட பதிவிற்கு அல்லது மற்ற இணையதளங்களுக்கு செல்ல முடியும். இது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது அந்த மவுசை தொடாமலே குறிப்பிட்ட லிங்கை எப்படி கிளிக் செய்வது என்று பார்க்கலாம். கேட்பதற்கே சுவாரஸ்யமா இருக்குல்ல வழிமுறையை அறிய கீழே தொடருங்கள்.

கூகுள் குரோம் பயனர்கள்:

குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் இந்த Dead Mouse நீட்சியை உங்கள் குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் ஆகியதும் குரோம் உலவியை reload செய்யுங்கள். பிறகு ஏதேனும் இணைய பக்கத்தை திறந்து அந்த பக்கத்தில் உள்ள லிங்கில் முதல் எழுத்துக்களை டைப் செய்யுங்கள். டைப் செய்ததும் அந்த எழுத்தில் உள்ள லிங்க் மேலும் கீழும் அசைவதை காணுங்கள்.

உதாரணமாக bbc news என்று லிங்க் கொடுத்து இருந்தால் நீங்கள் bbc என்று டைப் செய்தால் போதும். அந்த லிங்க் மேலும் கீழும் அசையும். உங்கள் கீபோர்டில் Enter அழுத்தினால் அந்த லிங்க் திறக்கும். புதிய டேபில் திறக்க Shift + Enter கொடுக்கவும்.


ஒரே பெயரில் நிறைய லிங்க் இருந்தால் Tab அழுத்தி சரியான லிங்கை தேர்வு Enter கொடுக்கவும். 


பயர்பாக்ஸ் பயனர்கள்:
பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு இது மிகவும் சுலபம் இதற்காக எந்த நீட்சியையும் உபயோகிக்க தேவையில்லை. பயர்பாக்ஸ் பிரவுசரை திறந்து ஏதேனும் இணைய பக்கத்தை ஓபன் செய்து "/" slash கீயை அழுத்தி பிறகு அந்த லிங்க் எழுத்தை அழுத்தினால் அந்த லிங்க் highlight ஆகும். பிறகு Enter கீயை அழுத்தினால் அந்த லிங்க் ஓபன் ஆகும். 

உதாரணமாக world cup என்று ஒரு லிங்க் இருக்கிறது என வைத்து கொள்வோம். / அழுத்தினால் ஒரு சிறிய விண்டோ வரும் அதில் wor என்று டைப் செய்தால்  போதும் அந்த லிங்க் ஹைலைட் ஆகும் பிறகு Enter கீயை அழுத்தினால் அந்த லிங்க் திறந்து விடும். 


இந்த வழிகளில் மவுசை தொடாமல் இணைய பக்கங்களில் உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.

Read More

Monday, 12 March 2012

கணினிக்கான Facebook Messenger தரவிறக்க..


பேஸ்புக் மீண்டும் இன்னொரு புதிய வசதியுடன் பேஸ்புக் நண்பர்களை சந்திக்க இருக்கிறது. பேஸ்புக் மெஸென்ஜர் அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளது பேஸ்புக். இந்த பேஸ்புக் மெஸென்ஜர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இனி நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டும் என்றால் பேஸ்புக் பக்கத்தை விரிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த புதிய பேஸ்புக் மெசன்ஜர் மூலம் எளிதாக சாட் செய்யலாம். ஏதாவது புதிய செய்திகள் நண்பர்களிடம் இருந்து வந்தால் அதை டெஸ்க்டாபிலேயே சுலபமாக பார்த்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. 

இதற்கு முன்பாகவே ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஃபேஸ்புக்  மெசன்ஜரை உருவாக்கி இருந்தது. இதனால் ஸ்மார்ட்போன்களில் எளிதாக பேஸ்புக் மெசன்ஜரை உபயோகிக்க முடிந்தது. இப்போது விண்டோஸ் இயங்குதளத்தில் உருவாகி இருக்கும் இந்த பேஸ்புக் மெசன்ஜர் மூலம், இந்த புதிய மெசன்ஜர் அப்ளிக்கேஷனை கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.

Read More

15 வருடங்களுக்கு மேல் சார்ச் இருக்ககூடிய போன் !


மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை சார்ச் தான். போனை உபயோகிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பேட்டரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் OFF நிலையில் வைத்திருந்தாலும் இதே நிலைதான். இப்பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது.
XPAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் SpareOne என்ற பெயர் கொண்ட மொபைல் போனை ஒருமுறை சார்ச் செய்தால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும். இத் தொலைபேசியில் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பேசமுடியும். போனை  உபயோகிக்காமல் வைத்தால் அதன் சார்ச் 15 வருடங்களுக்கு அப்படியே இருக்கும். இத்தொலைபேசி தயாரிக்கப்பட்டதன் நோக்கம், அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகும். ஒருமுறை சார்ச் செய்து, சுவிச் OFF பன்ணி கைப்பையில் வைத்துவிட்டால் போதும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தலாம். இக் கைபேசியின் விலை வெறும் 60 டாலர்கள் என்பது மேலும் இனிப்பான செய்தி. இவ்வருட இறுதியில் சந்தைக்கு வர இருக்கிறது.
Read More

Thursday, 8 March 2012

பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற - (Disable Timeline)

உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.
  • முதலில் இந்த  Timeline Remove லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
  • இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.

  • இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ்புக்கை உபயோகித்து மகிழுங்கள்.
Note: இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம்  எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம். 
Read More

Friday, 27 January 2012

விண்டோஸ் 7 கணினிகளுக்கு அழகழகான தீம்கள் இலவசமாக download செய்ய

 உங்கள் கணினியை ஒரே தோற்றத்தில் பார்த்து போர் அடித்து விட்டதா கவலையே படாதிங்க உங்கள் கணினியை உங்கள் விருப்பப்படி அழகாக மாற்றலாம்.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 மென்பொருளில் உள்ள பல வசதிகளில் தீம்கள் வசதியும் ஒன்று. இந்த தீம்களை நாம் விதவிதமாக மாற்றலாம். இந்த தீம்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனமே இலவசமாக அனைவருக்கும் அளிக்கிறது. விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் எப்படி இந்த தீம்களை இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போம்.



கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்து மைக்ரோசாப்ட் தளத்தை ஓபன் செய்தால் நூற்றுகனக்கான் தீம்கள் இருக்கும். அந்த தீம்கள் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டிருக்கும். Download லிங்கை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட தீம் டவுன்லோட் ஆகும்.

விண்டோஸ் 7 ல் தீம் மாற்றுவது எப்படி:

இந்த தீம்களில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் செய்தாலே போதும் தானாகவே உங்கள் கணினியில் தீம் மாறிவிடும். அல்லது டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து Personalize என்பதை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய தீமை மாற்றி கொள்ளலாம். 



Download - Windows 7 Themes
Read More
safdharge. Powered by Blogger.