'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Thursday, 29 September 2011

உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடத்தை காண !



இன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம் என்ற ஒரு மந்திரச்சொல் தான். இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை. இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு கண்டத்திற்கும் கேபில்களாலும், செயற்கைக்கோள் உதவியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் 75% நீரினால் சூழ்ந்துள்ளதால் இந்த கேபிள்களை கடலுக்கு அடியில் தான் பெரும்பாலும் கொண்டு செல்கிறார்கள். செயற்கைகோள்கள் 1 சதவீதம் தான் இணைய இணைப்பில் பங்கு பெற்றுள்ளது. மீதம் 99சதவீதம் இணையம் கேபிள்களை கொண்டே இணைக்கப்படுகிறது. இந்த இன்டர்நெட் கேபிள்கள் எப்படி கடலுக்கு அடியில் மற்ற நாடுகளுக்கு இணைக்க படுகிறது என்ற வரைப்படத்தை காணலாம்.

இந்த வரைப்படத்தை சுலபமாக காண நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது. இந்த தளத்திற்கு சென்றால் உலகில் அனைத்து நாடுகளுக்கும் இணைய இணைப்பிற்கான வரைபடம் காணப்படுகிறது.

இதில் உங்களுக்கு தேவையான நாடுகளில் கிளிக் செய்தால் பெரியதாகி காட்டும். மற்றும் வலது பக்கத்தில் ஒவ்வொரு நாடுகள் வரிசையிலும், இணைய இணைப்பு நிறுவனங்களும் இருக்கும் அவைகளில் கிளிக் செய்து மேலும் சில தகவல்களை பெறலாம்.
இந்த தளத்திற்கு செல்ல- CLICK HERE 
Read More

Tuesday, 27 September 2011

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு !

இப்பொழுது பெரும்பாலானவர்கள் விரும்பி பயணிப்பது ரயில்களில் தான். விரைவாகவும் அதே செலவு குறைவாகவும் தொல்லை இல்லாமல் தூங்கி கொண்டே செல்லலாம் என்று அனைவரும் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். எந்த சிரமமும் இன்றி ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட்டுக்களை பதிவு செய்யும் வசதியும் ரயில் பயணிகளுக்கு உள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து பின்னர் நமக்கு கொடுக்கப்படும்  E-Ticket(ERS)பிரிண்ட் எடுத்து கொண்டு சென்று விடலாம். பரிசோதகர் கேட்டால் அந்த E-Ticket (ERS)காட்டினால் போதும். இந்த முறை தான் இது வரை அனைவராலும் கடைபிடிக்கப் பட்டிருந்தது.

இப்பொழுது ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மேலும் ஒரு புதிய சலுகையாக இனி அந்த E-Ticket(ERS) பிரிண்ட் கூட எடுத்து செல்ல வேண்டாம். VRM (Virtual Reservation Message) எனப்படும் Screen Shot இருந்தாலே போதும். நீங்கள் டிக்கெட் பதிவு செய்து முடிந்ததும் வரும் E Ticket ஐ ஒரு Screen Shot எடுத்து உங்கள் மொபைலிலோ,லேப்டாப்பிலோ அல்லது ஐ-பேட் போன்றவற்றில் சேமித்து கொண்டால் போதும். டிக்கெட் பரிசோதகர் கேட்கும் பொழுது அந்த screen Shot மற்றும் உங்களுடைய ID Proof ஒரிஜினல் காண்பித்தால் போதும் நீங்கள் பயணம் செய்யலாம். 


இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் A4 பேப்பர்கள் வீணாவதை சேமிக்க முடியும் என்கிறது ரயில்வே நிர்வாகம். இந்த வசதியின் மூலம் டிக்கெட் பிரிண்ட் வீட்டில் மறந்து விட்டு போகும் பயணிகள் கவலையே பட வேண்டியதில்லை.
மேலும் அறிய-  IRCTC

Read More

Saturday, 24 September 2011

குறித்த இணையத்தளத்தை உங்கள் கணினியில் இயங்காமல் செய்வது எவ்வாறு !


பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் கணினியில் சில விரும்பாத இணையத்தளங்களை எவ்வாறு இயங்காமல் செய்வது. பொதுவாக சிறுவர்களை எவ்வாறு இதில் இருந்து பாதுகாப்பது .  எவ்வாறு எந்ததொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் மேற்கொள்வது என்பது பற்றி பாப்போம்.

1 ) முதலில் Run ஐ ஒப்பன் செய்ய வேண்டும் .

                         Click on Start > Run


  2 )  அதன் பின்னர் C:\WINDOWS\system32\drivers\etc
                           
                             (  கீழே காண்பிக்கப்பட்டது போல )

          
             அதன் பின்னர் OK  அழுத்தவும்


                        இவ்வாறு தோன்றும்

3 )  hosts என்பதை notepad மூலம் ஒப்பன் செய்ய .

* இதில் 127.0.0.1       localhost என்பதிற்கு கிழே உங்கள் தடை செய்ய வேண்டிய இணைய தளத்தை இடவும்  மேலே உள்ளவாறு
 
 
          உதாரணம் 127.0.0.1       www.badsite.com
                                 127.0.0.1       www.facebook. com
         
       
இவ்வாறு நீங்கள் விரும்பிய இணைத்தளத்தை இட்டு save பண்ண வேண்டும்.  அவ்வளவுதான் இப்போது குறித்த இணையத்தளம் உங்களால் ஒப்பன் பண்ண முடியாது
* மீண்டும் தேவையானால் அதனை நீக்கி save பண்ணினால் போதும்.

Read More

உங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற !

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம் இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை restart  செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.

இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.

மேலதிக விளக்கத்திக்கு இந்த வீடியோவை பார்க்கவும்.



இங்கே DOWNLOAD 32 Bit செய்க.

இங்கே DOWNLOAD 64Bit செய்க.

இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும்.

Read More

பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் !


நேற்று பேஸ்புக்கின் F8 நடைபெற்றது இதில் பல புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம் இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை,தோற்றத்தை கொண்டு வருவது எப்படி என பார்ப்போம்.

  • இதற்க்கு முதலில் Facebook Developer இந்த லிங்கில் செல்லவும். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு விண்டோ வந்தால் அதில் உள்ள Allow கொடுத்து உள்ளே செல்லவும். 
  • இனி கீழே ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்டு காட்டி இருக்கும் படி செய்யுங்கள். 
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் App Display Name, App namespace போன்ற இரு பகுதி இருக்கும் அதில் உங்களுக்கு தோன்றிய பெயரை கொடுக்கவும். அதில் App Namespace என்ற இடத்தில நீங்கள் கொடுக்கும் பெயர் Available என்று பச்சை நிறத்தில் வரவேண்டும். 

  • அடுத்து Security Check என்ற பகுதியில் verification code நிரப்ப சொல்லும் அதை சரியாக கொடுத்து submit பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுடையை App ரெடியாகி விடும். 
  • அந்த விண்டோவில் உள்ள Open Graph என்ற லிங்கை அழுத்தவும். 

  • அதில் உள்ள சிறு கட்டங்களில் ஏதோ ஒன்றை கொடுத்து Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.அதில் கடைசியில் உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 
  • இதற்க்கு அடுத்து ஓபன் ஆகும் இரண்டு விண்டோக்களிலும் இதே பட்டனை அழுத்தவும். முடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

  • மேலே இருப்பதை போல விண்டோ வந்தால் இதுவரை நீங்கள் செய்த அனைத்தும் சரியே. இப்பொழுது உங்கள் பேஸ்புக்கின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள். 
  • உங்கள் பேஸ்புக்கின் புரொபைல்பக்கத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி இருப்பதை காண்பீர்கள். 
  • அந்த பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே உங்களின் பேஸ்புக் கணக்கு புதிய தோற்றத்தில் மாறிவிடும். சில கூடுதல் வசதிகளையும் பெறலாம். 

  • இந்த புதிய தோற்றம் Developer பிரிவில் சேர்ந்துள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு பழைய தோற்றம் தான் தெரியும். 
Read More

Friday, 23 September 2011

குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights !

எப்படித்தான் யோசிக்கிராங்களோ இந்த கூகுள் காரங்க தினமும் ஏதாவது ஒரு புது புது வசதியை அறிமுக படுத்திகிட்டே இருக்காங்க. இவுங்க வெளியிட்டுள்ள வசதிகளை பட்டியல் போடணும்னா இந்த பதிவு பத்தாது. இதையெல்லாம் மீறி இப்பொழுது புதிய வசதியாக Google Flights என்ற புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் விமான டிக்கெட்டுக்களின் விவரங்கள் விமானம் புறப்படும் நேரம், பயணிக்கும் கால அளவு நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலைப்பட்டியல் என அனைத்தையும் பார்த்து கொள்ளலாம்.

முதலில் இந்த தளம் Google Flights சென்று நீங்கள் கிளம்பும் இடத்தையும் சென்று சேரவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள். இவைகளை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு அனைத்து விவரங்களும் காட்டும். 

இதில் உள்ள விவரங்கள் உங்களுக்கு தேவையான வகையில் மாற்றி கொடுத்து விமானங்களை தேர்வு செய்யலாம். நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்ப உள்ள விமானங்கள் உங்களுக்கு பட்டியலில் தெரியும்.


முக்கியமான விஷயம் இந்த சேவை தற்பொழுது அமெரிக்கா நகரங்களுக்கு மட்டும் தான் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வரவேற்ப்பை பொருத்து கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த சேவை வரலாம். 

Read More

Thursday, 22 September 2011

மொபைல்களில் அழிக்க முடியாத Application களை சுலபமாக அழிக்க !

நமது மொபைல்களில்  சில Application இன்ஸ்டால் செய்திருப்போம் அவைகளை வேண்டாம் என்றால் அன் இன்ஸ்டால் செய்தால் நீங்கிடும் ஆனால் சில சமயம் Application  கள் அழிய மறுக்கும்,கணினி என்றால் அழிய மறுக்கும் Applicationகளை நீக்க பல மொன்பொருள்களை  பயன்படுத்தலாம். ஆனால் மொபைலில் அழிய மறுக்கும் Application -களை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவோம் .சில சமயங்களில் இத்தகைய Application -கள் மொபைலை ஹேங் ஆக்கிவிடுவது மட்டுமல்ல சில சமயங்களில் நமது மொபைலின் மெமரி கார்டுகளை செயலிழக்கச்செய்துவிடும் இதன் தாக்கம் ஸ்மார்ட் போன்களில் அதிகமாக காணப்படும்  .

இக்குறைபாடுகளை போக்க File Manager   என்னும் சிறு மென்பொருள் உதவுகிறது. அழிய மறுக்கும் Applicationகள் சிஸ்டம் பகுதியில் இன்ஸ்டால் எனுமிடத்தில் பதிந்து இருக்கும் அவைகளை File Manager மூலம் Delete செய்தால் அழிய மறுக்கும் Applicationகளை  நமது மொபைல்களை விட்டு நீக்கலாம் அது போல  Temp பகுதியில் இருக்கும் தேவைற்றதை நீக்குவதின் மூலம் உங்களின் மொபைலின் செயல் திறனை உயர்த்தலாம் .இந்த File Manager சிம்பியான் வகை மொபைல்களில் சிறப்பாக செயல்பட்டாலும் Javaவை ஆதரிக்கும் மொபைல்களிலும் செயல்படும்      File Manager  என்னும் சிறு மென்பொருள் பின் வரும் தளங்களில் இருந்து எளிதாக இலவசமாக பதிவிறக்கி கொள்ளாலாம்
தள முகவரிகள்

http://www.getjar.com
http://www.mobileheart.com
http://www.mobile9.com
http://www.cnet.com
http://www.brothersoft.com
Read More

Wednesday, 21 September 2011

மொபைல் போனில் தமிழில் எழுதிட !

இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser) http://www.opera.com/mobile/ பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
ஒபேரா உலாவியின் (settings)அமைப்புகள் பகுதிக்கு சென்று ("Font Size")எழுத்துரு அளவை பெரியது(Large) ஆகவும், (Mobile view) ஐ "ON" ம் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்
(address Bar") முகவரிப்பட்டையில் about:config என தட்டச்சு செய்து config page பக்கத்திற்கு சென்று அப்பக்கத்தின் இறுதியில்/அடியில் உள்ள "Use bitmap fonts for complex scripts" ஐ "YES" ஆம் என தெரிவு செய்த பின் சேமித்துக்கொள்ளுங்கள். இறுதியாக ஒபேரா உலாவியை மீள தொடக்குங்கள் (Restart)

உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தளத்தில் எழுத முடியுமா ?

இதோ அதற்கான வழி
mini opera உலாவியில் http://scriptconv.googlelabs.com/  இந்த இணையத்தள முகவரிக்கு ( Address) சென்று தமிழ் உச்சரிப்பை அவ்வாறே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் (Please type in English as you pronounce words in Tamil. பின்னர் தமிழிற்கு மாற்றவும்( Convert it to Tamil). அதன் பின்னர் அதனை பிரதி (Copy) செய்து வேண்டிய இடத்தில் ஒட்டுங்கள் (paste).

Are you unable to view Tamil web pages / Tamil Unicode Fonts in your Mobiles? Follow these Steps...
உங்கள் கைத்தொலைபேசியில் தமிழ் ஒருங்குறியிலமைந்த இணையப் பக்கங்களை பார்வையிட முடியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser from http://www.opera.com/mobile/ )பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.இப்பொழுது உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
Now

# click "settings"

# Now change the "Font size" as "large"

# Then check the "Mobile view"box"

# Then "Save"the settings.

Now again

Type "about:config" in the "address bar"

# Then "go to" config page.It will open a page named "Power User settings"

 # go to the bottom of the "Power user setting" page.

# you will see option named "use bitmap fonts for complex scripts"

# Check "Yes" for "Use bitmap fonts for complex scripts"

# Then "Save" the setting.

இப்பொழுது உங்களால் நிச்சயமாக தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.

அல்லது 

இந்த  மென்பொருளை  பயன்படுத்தி  எழுதிட முடியும்.

இங்கே  DOWNLOAD செய்க.Top of Form
Read More

Monday, 19 September 2011

Laptop திருடப்பட்டால் அதை கண்டுபிடிக்க !

காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம், அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .
இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள்.
Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்



படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள்.

Laptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க

இதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.




சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ?

Mail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:

இந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும். 


மேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .
 

(Destroy Data Automatically In Case Of Theft)

இதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Folder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.




மேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு, உங்கள் Laptop Low battery நிலைக்கு வரும் முன் Alarm எழுப்பும், ஏதாவது Disk Failure ஆகும்போதும் alarm எழுப்பும். சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த சிறப்பான இலவச software .

Read More

Sunday, 18 September 2011

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.
                                               


                                                        1.Eraser




               தரவிறக்க download
                                           
                                                          
                                2.Kill Disk



 தரவிறக்க   download
Read More

மொபைலை பாதுகாக்க சில வழிமுறைகள் !

 இன்றைய நவீன உலகத்தில் மொபைலை உபயோகப்படுத்தாத நபர்களே  இல்லை எனலாம்.
மொபைல் வாங்குவது பெரிதல்ல அதை பாதுகாப்பதே பெரிய விஷயம். அதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.  


1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம்.
எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.

4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.

6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.

7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.

8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.


9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.

10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.

12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.

13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.

14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.

15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.

16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது
Read More

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி !


நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்

முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கு  download செய்து கொள்ளுங்கள்.  




பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும்.  கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால்.

AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும்.

Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.

இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.

பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.

இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.



அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள  ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.

பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்


அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server)  என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் - 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள். 

 அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.


அந்த கணினியை வலது கிளிக் செய்து  Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் - 12345@12345)  அதை இங்கே கொடுங்கள் முடிந்தது. 


இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்

இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சாட் செய்ய முடியும்.

இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.


ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கே download செய்க.
Read More
safdharge. Powered by Blogger.