'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Friday, 9 September 2011

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது உபயோகிக்கிறார்களா என கண்டறிய !

Text Resizer: Click for Resizer
நாம் நம்முடைய கருத்துக்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுவாக உள்ள தளம் பேஸ்புக் எனும் சமூக வலைத்தளம்.  இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆகி நம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ஒருவர் நினைத்தால் மற்றொரு கணக்கின் பாஸ்வேர்ட் அறிய நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆதலால் நம் கணக்கை பாதுகாப்பாக வைத்து கொள்வது நம்மிடம் தான் உள்ளது. இப்படி நம் பேஸ்புக் கணக்கை நமக்கு தெரியாமல் வேறு யாராவது உபயோகிக்கிறார்களா என அறிய.

  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது கணக்கு பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் என்பதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு வேறு ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள கணக்கு பாதுகாப்பு என்பதை க்ளிக் செய்யுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள இரண்டு கட்டங்களிலும் டிக் மார்க் கொடுத்து கீழே உள்ள சேமி என்பதை க்ளிக் செய்து விடவும்.
  • இதை நீங்கள் ஆக்டிவேட் செய்யும் கணினியை தவிர மற்ற கணினியில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்தால் உங்கள் மெயிலுக்கும் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை பதிந்து இருந்தால் உங்கள் போனுக்கும் எச்சரிக்கை செய்தி வரும். 
  • அப்படி எச்சரிக்கை செய்தி வரும் பட்சத்தில் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றிகொள்ளுங்கள். 

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.