'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Sunday, 28 August 2011

CHINA - மொபைல்களின் ரகசிய CODE -கள் !


இன்று மொபைல் உலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இந்த சைனா மொபைல்கள்.டூப்ளிகேட் செய்வதில் வல்லவர்களான சீனர்கள் பிரபல கம்பெனிகளின் மொபைல்கள் போன்று அச்சு அசலாக உருவாக்கி மிகவும் குறைவான விலையில் கொடுப்பதால் அனைவரும் அது போன்ற போன்களை உபயோகப்படுத்துகின்றனர். சாதரணமாக குறைந்த விலையில் Dual Simcard, Blue tooth, Camera, Audio video players போன்ற அனைத்து வசதிகளையும் கொடுத்து விடுகின்றனர். Tv, 4 Simcard specility இப்படி ஏராளமான வசதிகளை வழங்குவதால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இந்த வகை போன்களையே நாடி செல்கின்றனர்.
(குறிப்பு : சவூதியில் china  mobile -களை வாங்க வேண்டாம்).
இந்த சைனா மொபைல்-களுக்கான ரகசிய code-கள் கீழே தரப்பட்டுள்ளது.


சீன மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள்: 
  • Default user code: 1122, 3344, 1234, 5678
  • Engineer mode: *#110*01#
  • Factory mode: *#987#
  • Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
  • Restore factory settings: *#987*99#
  • LCD contrast: *#369#
  • Software version: *#800#
  • Software version: *#900#
  • Set default language: *#0000# Send
  • Set English language: *#0044# Send
  • Set English language (new firmware): *#001# Send
  • GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
  • Set Engineer Mode *888*888#
  • Set Engineer Mode *#3646633#
  • Set Engineer Mode ***503#
Codes to Change Screen Language:
  • Set Default Language :  *#0000# + Send 
  • Set Language to Russian:  *#0007# + Send 
  • Set Language to French:  *#0033# + Send 
  • Set Language to Spanish:  *#0034# + Send 
  • Set Language to Italian:  *#0039# + Send
  • Set Language to English:  *#0044# + Send 
  • Set Language to German:  *#0049# + Send
  • Set Language to Thai:  *#0066# + Send
  • Set Language to Vietnamese:  *#0084# + Send
  • Set Language to Arabic:  *#0966# + Send
Codes for Reset Mobile Factory Settings
  • *#987*99#
  • *#77218114#
  • *#881188#
  • *#94267357#
  • *#9426*357#
  • *#19912006#
  • *#118811#
  • *#3646633#
  • *#6804#

Read More

Friday, 26 August 2011

தண்ணீரைப்பற்றி தெரிந்துகொள்ள?


நம் வாழ்வின் இன்றியமையாத ஒன்று தண்ணீர்,அதை சுத்தமாக பயன்படுத்துவது மிக அவசியம். முன்பெல்லாம் ஊற்று,கிணறு போன்றவைகளில் நீரெடுத்த காலம்போய் இன்று போர்யிட்டு மோட்டார்களில் தண்ணீர் எடுதுகொண்டிருக்கின்றோம். மேலே டேங் எப்படிவுள்ளது என்பதுகூட நமக்கு தெரியாது. நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ளகூட முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. இதைப்பற்றிய சில தகவல்களை கீழே பார்ப்போம்.

1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?

நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு, பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.

2. 
புளோரைடு அளவுகோல் பற்றியும்அதன் விளைவுகள் பற்றியும்கூறவும்?


குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும்பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.

3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?

குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.

4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?
காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்றுசூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்கவேண்டும். கிணறுகளையும்நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

5. 
சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?

நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

6.
நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போதுமஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?

இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.

7. 
போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?

தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும்உப்பும் இருக்கும் போது நீரானதுஉப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

8. 
கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்
நீரை கொதிக்க வைத்துகுளிர வைத்துவடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000லிட்டருக்கு கிராம் என்ற அளவில்)
தொழிற்சாலை கழிவுகள்வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்),கால்நடை கழிவுகள்நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.

கைப்பம்புகள்குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய்போர்வெல்லின் அடியில் குளித்தல்,மாடுகளை கழுவுதல்துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.


தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.
Read More

கம்ப்யூட்டரை பாதுகாக்க சில வழிமுறைகள் !


இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில்நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோசிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோதகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.  

இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும்நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால்அச்சமின்றி இயங்கலாம். 

1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து,மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை,கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில்தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டுபதியும் படி அமைக்க வேண்டும். 

2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்கவேண்டும்.

3. ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து,தேவைப்படும்போது இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்துடன் பாதுகாப்பு தரும் இத்தகைய புரோகிராம்களைத் தருகிறது. 

4. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் தரும்புரோகிராமினைக் காட்டிலும் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப்பயன்படுத்துவது நல்லது.

5. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். 

6. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதாஅல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா?அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதாஉங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமாஉடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது

அட்டாச்மென்ட் ஆக scan@ virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

7. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதாஅவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். 

8. விண்டோஸ் தன் இயக்கத்தின் போதுபல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன என்று பார்த்து அவற்றின் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான புரோகிராம்கள் இருப்பின்உடனே அவற்றை நிறுத்தினால்சிஸ்டம் இயங்குவதற்கு அது தேவையா எனத் தெரிந்துவிடும். 

9. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே மைக்ரோசாப்ட் தளம் சென்றுஅங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்

10. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயல வில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

11. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 

12. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

13. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை மாற்றிக் கொள்ளலாம். 

14. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.

15. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள்நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

16. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங்பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும். 

17. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால்அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க்வருகிறதாஉடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லைதான்.

18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவேமாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள். 

19.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன் களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது. 20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில்தரப்போகி றீர்களாஅந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன்முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

21. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.

22.முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையை இன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களை யும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆண்ட்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்து விடுவதால் அத் தொகுப்பு களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

23. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளன.

24. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்குதள்ளப்படும்.

25. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளி யேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள். 

26. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail. com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும். 

27. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும்நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள்,மைக்ரோசாப்ட் லைவ் மெயில்யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில்முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

28. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

29. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர் பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது.

அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது
Read More

Bit-முதல்-Yotta Byte-வரை !


ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் USB -ல் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில்(Byte) கூறுவோம்.
1பிட் என்பது பைனரி எண்ணில் அல்லது ஆக இருக்கும்.

1பிட்= 0அல்லது 1

பிட் = 1 நிப்பிள் (1nibble)

பிட் = 1 பைட் (1 Byte)
1024 பைட் = 1 கிலோ பைட் (KB) Kilo Byte
1024 கிலோபைட் = 1 மெகா பைட் (MB) Mega Byte
1024 மெகா பைட் = ஜிகா பைட் (GB) Gega Byte
1024 ஜிகா பைட் = 1 டெரா பைட் (TB) Tera Byte
1024 டெரா பைட் = 1 பீட்டா பைட் (PB) Peta Byte
1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட் (EB) Exa Byte
1024 எக்ஸா பைட் = 1 ஜெட்டா பைட் (ZB) Zetta Byte
1024 ஜெட்டா பைட் = 1 யோட்டா பைட் (YB) Yotta Byte
மேலும் இங்கு click செய்து உங்களுக்கு தேவையான பைட்டை Convert செய்து தெறிந்து கொள்ளலாம்.
Read More
safdharge. Powered by Blogger.