Text Resizer: Click for Resizer
பேப்பர் போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட mobile phone ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.
பேப்பர் போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட mobile phone ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார்.
இந்த mobile phone மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
பேப்பர் போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது ‘பேப்பர் போன்’ என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திரனியல் புத்தகங்களை சேமித்தல், பாடல்களை செவிமடுத்தல் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியும். இதில் 3.7 அங்குலமான திரை பொருத்தப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்ட போதிலும் இதனை உருவாக்க ஏற்பட்ட செலவு 7000 முதல் 10,000 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments:
Post a Comment