'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Wednesday, 27 July 2011

இந்திய அரசால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்!


சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும்.

அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.

அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால் - இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு.

இக்குழு இந்தியா முழுவதும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு 404 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்திய நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையின் அவலங்கள் இவ்வறிக்கையின் மூலம் வெளிப்பட்டபோது முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பல மாநிலங்களில் கல்வி, பொருளாதார நிலைகளில் தலித் மக்களை விடவும், துப்புரவுத் தொழிலாளர்களை விடவும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின் தங்கியிருப்பதும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வரும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

நாடு முழுவதும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. இதனால் முஸ்லிம்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 15 அம்சத் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற 90 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் பொதுவாக முஸ்லிம்களை கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது மத்திய அரசு.

சச்சார் அறிக்கையில், ஓரளவு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள மதத்தைக் காரணம் காட்டி, வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்கும் மத்திய அரசு, ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து வருகிறது. இந்த வரைவுத் திட்டத்தின்படி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது வாடகைக்கு வீடு தர அல்லது வீட்டு வசதியை மறுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.


இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் விளையப் போவதில்லை. முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்றால் சட்டப்படி அது தவறு என்பதை விளங்கிக் கொள்ளும் வீட்டின் உரிமையாளர், வாடகைத் தொகையையும், முன் பணத்தையும் வேண்டுமென்றே கூட்டிச் சொல்லி தானாகவே முஸ்லிம்கள் விலகிக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டால் சட்டத்தால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒரு வேளை அதிக வாடகை இருந்தாலும் ஓ.கே. என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சிலரால் வீட்டு உரிமையாளருக்குத்தான் ஆதாயம் ஏற்படும். இதுமட்டும்தான் இச்சட்டத்தால் ஏற்படும் பயனாக இருக்க முடியும். இதுபோன்ற வீண் நடவடிக்கைகளை விட்டு விட்டு முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தித் தர மத்திய அரசு முன் வர வேண்டும். இது ஒன்றுதான் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டமாக இருக்கும். இதுவல்லாமல் 15 அம்சத் திட்டம் என்ன 80 அம்சத் திட்டம் போட்டாலும் அது - தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே உதவும்.
Read More

உணவு பொருட்கள் வாங்கும்போது ஜாக்கிரதை !


இந்த கால கட்டத்தில் உணவு பொருட்களை வாங்குவதற்கே பயமாக உள்ளது. காரணம் அணைத்து பொருட்களிலும் கலப்படம்,தரமின்மை மற்றும் போலியான தயாரிப்பு ,இவைகளால் நம் உடல் நலத்திற்குத்தான் கேடு.

பொருட்களில் எத்தனை made -கள் .இதில் எதை வாங்குவதென்றே சில நேரங்களில்  குழம்பிபோய்விடுகின்றோம்.இதில் எது தரமுள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.அதே நேரத்தில் சில நாடுகளில் தயாராகும் பொருட்களை வாங்க வேண்டாமென சில மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இருப்பினும் இது சம்பந்தமாக மக்களுக்கு எத்திவைப்பதில் அரசாங்கத்திற்கோ அல்லது வேறு தனித்துரைக்கோ எந்த அக்கறையும் இல்லை எனவே நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சீனா வில் பால் உணவு பொருட்களால் பாதிப்படைந்த குழந்தைகள்

சரி விஷயத்திற்கு வருவோம்- பொருட்கள் வாங்கும்போது குறிப்பாக சீனா மற்றும் தைவான் பொருட்களை வாங்க வேண்டாம் .அதிலும் பால் சத்து உள்ள பொருட்களை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

சரி வாங்கும்போது இது எந்த நாட்டு பொருள் என்பதை நாம் எப்படி கண்டுகொள்வது. அது ரொம்ப சுலபம். அந்த பொருட்களில் "BAR-CODE "   என்று ஒன்று இருக்கும் அவைகளில் இருக்கும் முதல் மூன்று எண்கள் தான் அந்த பொருள் எந்த நாட்டு தயாரிப்பு என்பதை காட்டிக்கொடுக்கிறது.அந்த CODE - களை வைத்து MADE  ஐ தெரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது ஒவ்வொரு நாட்டிற்கும் என்ன CODE  என்பதை பார்ப்போம்.


00-13: USA & Canada 
20-29: In-Store Functions 
30-37: France 
40-44: Germany 
45: Japan (also 49) 
46: Russian Federation 
471: Taiwan
474: Estonia 
475: Latvia 
477: Lithuania 
479: Sri Lanka 
480: Philippines 
482: Ukraine 
484: Moldova 
485: Armenia 
486: Georgia 
487: Kazakhstan 
489: Hong Kong 
49: Japan (JAN-13) 
50: United Kingdom 
520: Greece 
528: Lebanon 
529: Cyprus
531: Macedonia 
535: Malta 
539: Ireland
54: Belgium & Luxembourg 
560: Portugal 
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania 
599: Hungary 
600 & 601: South Africa
609: Mauritius 
611: Morocco 
613: Algeria
619: Tunisia
622: Egypt 
625: Jordan
626: Iran 
64: Finland 
690-692: China 
70: Norway 
729: Israel 
73: Sweden
740: Guatemala 
741: El Salvador 
742: Honduras 
743: Nicaragua 
744: Costa Rica 
746: Dominican Republic 
750: Mexico
759: Venezuela 
76: Switzerland 
770: Colombia 
773: Uruguay 
775: Peru 
777: Bolivia
779: Argentina 
780: Chile 
784: Paraguay 
785: Peru 
786: Ecuador 
789: Brazil 
80 - 83: Italy
84: Spain 
850: Cuba 
858: Slovakia 
859: Czech Republic 
860: Yugoslavia 
869: Turkey 
87: Netherlands
880: South Korea 
885: Thailand 
888: Singapore 
890: India 
893: Vietnam 
899: Indonesia 
90 & 91: Austria 
93: Australia
94: New Zealand 
955: Malaysia 
977: International Standard Serial Number for Periodicals (ISSN) 
978: International Standard Book Numbering (ISBN) 
979: International Standard Music Number (ISMN) 
980: Refund receipts 
981 & 982: Common Currency Coupons 
99: Coupons

இவைகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய முதல் மூன்று எழுத்து 
690 .691  மற்றும் 692 -இது சீனா .
471 - இது தைவான் .

(சீனர்கள் - தன்நாட்டு பொருளை சாப்பிட்ட பலர் பாதிக்கப்பட்டதால் அவர்களே அந்த நாட்டு பொருட்களை வாங்குவதில்லையாம்).

ஆகவே நீங்களும் பொருட்களை வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.


Read More

MOBILE-க்கு தேவையான இலவச APPS தளங்கள்!

மது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீடியோக்கள், அப்ளிகேஷன்கள் ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டு மானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*  www.zedge.com  வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி மொபைல் மாடலையும் தேர்வு செய்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம். அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் மொபைல்களுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக உங்கள் மொபைலிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.அதற்கு உங்கள் மொபைலின் பிரவுசரில் http://m.zedge.net  என்று டைப் செய்து இணையலாம்.

*  www.gallery.mobile9.com  நமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,அப்ளிகேஷன்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்,அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கும் வைக்கலாம்.

*  www.getjar.com  முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது. பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள்  உள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.மொபைலில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் மொபைலின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

*  http://www.apniapps.com  ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான அப்ளிகேஷன்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அப்ளிகேஷனைப் பற்றிய சிறுகுறிப்பும் உள்ளது, அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் அதை  தேர்ந்தேடுக்கலாம்.

*  http://www.mobilemastee.com  வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், ரிங்டோன்கள், தீம்ஸ்,அப்ளிகேஷன்கள்,ஸ்க்ரீன்சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

*  http://dailymobile.se  ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ட்ராய்டு வகையை சேர்ந்த மொபைல்களுக்கு வால்பேப்பர்கள், கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகுதான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்ததளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

*  http://www.ipmart-forum.com  இந்த தளத்தில் 'Fun,Games and Entertaining' என்ற பிரிவில் சென்று நீங்கள் வைத்திருக்கும் எந்தவகை மாடலுக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய அப்ளிகேஷன்களையும்,அப்டேட் செய்யப்பட்ட பழைய அப்ளிகேஷன்களையும் உடனுக்குடன் தருகிறார்கள். விலை கொடுத்து வாங்க வேண்டிய அப்ளிகேஷன்கள் கூட இங்கே இலவசம் தான்.

http://www.youpark.com  ஜாவா,சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி
ஆன்ட்ராய்டு வகை போன்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்துகொள்ள இந்ததளம் உதவுகிறது.இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள்.காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை.ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்துவிட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.உங்கள் மொபைல் வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.
Read More

இன்னும் வராத மொபைல் நுட்பங்கள்?

கவல் தொடர்பு துறையில் இந்தியா நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருப்பதாக அடிக்கடி நாம் செய்திதாள்களில் படிக்க நேர்கிறது.

மே மாதத்தில் 30 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்தார்கள்,மொத்த    இணைப்பு 20 கோடியை தாண்டிவிட்டது".

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ளது".என்றெல்லாம் இந்திய அரசு பீத்திக்கொண்டாலும் உண்மையில் மிக மோசமான மதிப்பு கூட்டப்படாத சேவைகளுடன் தான் இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்களது மொபைல் சேவையை வழங்கி வருகின்றன.

பல நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட 3G சேவை இப்போதுதான் இந்தியாவில் வந்திருக்கிறது.ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தை முதலில் சில குறிப்பிட்ட மாநகரங்களில் அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனமும் வழக்கம் போல குறைட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக மொபைல் நிறுவனங்கள் தரும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் GPRS,MMS,WAP PORTAL,VOICE SERVICE, CAALER TUNES, RINGTONES, WALLPAPERS,GAMES DOWNLOADS போன்ற சேவைகள் தரப்பட்டாலும் எப்போதோ நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு சேவைகள் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை.காரணம் இந்த சேவைகளை மொபைல் ஆபரேட்டர்கள் மூலமாகத்தான் பயன்படுத்த முடியும் .

VISUAL RADIO (விஷுவல் ரேடியோ) : இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க நோக்கியா நிறுவனத்தை சார்ந்ததாகும்,பொதுவாக நாம் மொபைலில் ரேடியோ கேட்கும் போது அந்த ரேடியோ ஸ்டேஷன் பெயர் மற்றும் அலைவரிசை எண்ணை மட்டுமே போனின் திரையில் நம்மால் பார்க்க முடியும். ஆனால் நோக்கியா கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம் மூலம் அந்த பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்? பாடலை பாடியது யார்? உட்பட பல விபரங்களையும், வானிலை நிலவரங்களையும் சாலைகளில் ட்ராபிக் நிலவரங்களையும் என எல்லாவற்றையும் நமது மொபைல் திரையில் நேரடியாக காண முடியும். மேலும் அந்தப் பாடலுக்கு நாம் மதிப்பு கொடுப்பது அந்தப் பாடலை தரவிறக்கம் செய்து கொள்வது போன்ற வேலைகளையும் செய்து கொள்ள முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நோக்கியா நிறுவனம் முதல் முறையாக அதை தாங்கள் தயாரிக்கும் மொபைல்களில் புகுத்தி அதன் சொந்த நாடான பின்லாந்து நாட்டில் சோதனை செய்து பார்த்தது,அது வெற்றி பெறவே உலகத்திலுள்ள பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் தங்களது மொபைல் சாதனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது.

 இந்த தொழில்நுட்பம் நோக்கியா போன்களில் மட்டுமே இருக்கும்,இந்த வகை போன்கள் 5000/- என்ற விலையிலிருந்து சந்தையில் கிடைக்கிறது. குறிப்பாக நோக்கியாவின் 'N-SERIES' போன் வகைகளில் இந்த தொழில்நுட்பம் உத்திரவாதத்துடன் உள்ளது.

PUSH TO TALK (புஷ் டூ டாக்) : இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும்  இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது. இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான். இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும்.அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்,அதாவது பொதுவாக கான்பரன்ஸ் கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டு மென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.
இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆபரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறும்?

குறிப்பு : இந்த இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய  மொபைல்களை நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தி விட்டது.ஆனால் இங்குள்ள மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்கள் இந்த சேவைகளை முழுமையாக தர அக்கறை காட்டவில்லை.அதனால் நோக்கியா நிறுவனம் புதிதாக தயாரித்து வெளியிடும் பெரும்பாலான மொபைல்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பதிந்து வெளியிடுவதை குறைத்துக் கொண்டுள்ளது.

Read More

823,ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் ?!!

 இந்த வருடம்(2011) ஜூலை மாதம்.3,10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

அதேபோல, இந்த மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 5 வெள்ளிக்கிழமைகளும், 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமைகளும் வருகின்றன.

இப்படி ஒரே மாதத்தில் 5 வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வருவது அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டுள்ளது. 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இது போன்று 5 வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வரு
மாம். கணித ரீதியாக காலெண்டரில் இப்படி வருவது மிகவும் அரிதான விஷயமாகும்.
Read More

ரமழானின் சிறப்பும் சில விளக்கமும் !




ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவும்  இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் தான் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) - நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. கர்ப்பிணிப் பெண் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
5. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
6. பால் கொடுக்கும் தாய் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187

2. ஊசி போடலாமா ?
உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?
எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்

4. கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் நோன்பை விடலாமா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

5. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?
நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

6. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

தொகுப்பு: Syed Sirajudeen(Kottai.KPM.Guys).
Read More

Tuesday, 26 July 2011

மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்ட் டிப்ஸ்!

எளிதில் பைல் பெற்றுத் திறக்க
வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது.
வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் N என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக் கையில் இந்த கட்டளை உங்களுக்குப் பயன் தரும். டாகுமெண்ட் பைல்கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஷகள் கொண்ட பைல்களையும் பட்டியலிட்டுக் கேட்கலாம். எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடுத்துப் பெறலாம். இந்த வகைப் பைல்களில் S என்ற எழுத்தில் தொடங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெறலாம்.

வேர்ட் 2010ல் கூடுதல் வசதி
வேர்ட் 2010ல் தரப்பட்டுள்ள புதிய வசதியான Backstage வியூ, நம் பைலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெற உதவிடுகிறது. உங்களுடைய குழுவில் உள்ள மற்றவர்கள், இந்த டாகுமெண்ட்டைப் பார்த்திருந்தால், எடிட் செய்திருந்தால், அதனை அறிந்து கொள்ள முடிகிறது. File டேப் கிளிக் செய்து, அதில் Info தேர்ந்தெடுத்தால், இந்த தகவல்களைப் பெறலாம். வலது புறம் உள்ள பிரிவில் இவை காட்டப்படுகின்றன. இந்த ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை, ஒரு டாகுமெண்ட் பேனலில் (Document Panel) இணைத்துக் கொள்ளவும் இங்கு வசதி தரப்பட்டுள்ளது.

டெக்ஸ்ட் அடிக்கோடிடுதல்
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl +U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடை வெளியிலும் கோடு வரையப்படும்.
ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl+Shft+W) கண்ட்ரோல்+ ஷிப்ட்+டபிள்யு.
Read More

விண்ணில் இருந்து பார்க்கக் கூடியவாறு தனது பெயரை பொறித்த கோடீஸ்வரர்!

ஒவ்வொரு குழந்தைகளும் தமது பெயரை கடற்கரை மண்ணில் எழுதிப் பார்த்து ஆனந்தம் அடைவார்கள். ஆனால் கடற்கரை மண்ணில் எழுதப்படுபவைகள் அழிந்து போய்விடும். அரபு நாட்டு செல்வந்தர் ஒருவரின் பெயர் மட்டும் அழியாமல் இன்னும் அப்படியே உள்ளது என்றால் நம்புவீர்களா? இது மாயமோ மந்திரமோ அல்ல. ஹமாத் பின் ஹம்தான் அல் நஹ்யான் என்ற 63 வயதுடைய செல்வந்தர் ஒருவர் சொந்தமாக Al Futaisi என்ற தீவை விலைக்கு வாங்கியுள்ளார்.

Al Futaisi தீவில் 'HAMAD' என்ற தனது பெயரை 3 கிலோமீட்டர் நீளத்துக்கு பொறித்து வைத்துள்ளார். தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்துள்ளார். இந்த எழுத்துக்கள் தண்ணீரால் அழிக்கமுடியாதபடி எழுதப்பட்டுள்ளது.


இதனை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. ஹமாத், 'Rainbow Sheikh' என்ற பெயரால் அழைக்கப்படுவபர் என்பதுடன், சவூதி அரேபியாவை ஆளும் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவராவார். அண்மையில் இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார்.


அபுதாபியில் இவருக்கு ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை விட 64 மடங்கு பெரியது.

அதேவேளை இவர் மொரோக்கோவில் உள்ள பொது மருத்துவமனையில் உள்ள சிறுநீரகக்கல் சிகிச்சைப் பிரிவு ஆய்வு கூடத்திற்கு தொடர்ந்தும் நிதி உதவி செய்து வருகிறார் என்றும் மருத்துவத்திற்கு இவர் பெருங்கொடையாளி என்றும் குறிப்பிடப்படுகிறது.
Read More

புதிய வசதிகளுடன் VLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு - V1.1.11.



VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.11 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய வெர்சனை உபயோகிப்பவர்கள் இந்த புதிய வெர்சனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  


சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
    • APE (Monkey Audio)
    • Real Audio 2
    • Alaw/µlaw
    • AMR (3GPP)
    • MIDI 3
    • LPCM
    • ADPCM
    • QCELP
    • DV Audio
    • QDM2/QDMC (QuickTime)
    • MACE
    இப்படி பல வகைப்பட்ட ஆடியோ வீடியோ பைல்களை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும். இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று ஆகவே இந்த மென்பொருளின் புதிய பதிப்பை கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி பெற்று கொள்ளவும்.

    இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 



    Read More
    safdharge. Powered by Blogger.