'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Tuesday, 26 July 2011

மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்ட் டிப்ஸ்!

Text Resizer: Click for Resizer
எளிதில் பைல் பெற்றுத் திறக்க
வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது.
வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் N என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக் கையில் இந்த கட்டளை உங்களுக்குப் பயன் தரும். டாகுமெண்ட் பைல்கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஷகள் கொண்ட பைல்களையும் பட்டியலிட்டுக் கேட்கலாம். எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடுத்துப் பெறலாம். இந்த வகைப் பைல்களில் S என்ற எழுத்தில் தொடங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெறலாம்.

வேர்ட் 2010ல் கூடுதல் வசதி
வேர்ட் 2010ல் தரப்பட்டுள்ள புதிய வசதியான Backstage வியூ, நம் பைலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெற உதவிடுகிறது. உங்களுடைய குழுவில் உள்ள மற்றவர்கள், இந்த டாகுமெண்ட்டைப் பார்த்திருந்தால், எடிட் செய்திருந்தால், அதனை அறிந்து கொள்ள முடிகிறது. File டேப் கிளிக் செய்து, அதில் Info தேர்ந்தெடுத்தால், இந்த தகவல்களைப் பெறலாம். வலது புறம் உள்ள பிரிவில் இவை காட்டப்படுகின்றன. இந்த ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை, ஒரு டாகுமெண்ட் பேனலில் (Document Panel) இணைத்துக் கொள்ளவும் இங்கு வசதி தரப்பட்டுள்ளது.

டெக்ஸ்ட் அடிக்கோடிடுதல்
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl +U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடை வெளியிலும் கோடு வரையப்படும்.
ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl+Shft+W) கண்ட்ரோல்+ ஷிப்ட்+டபிள்யு.

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.