'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Monday, 25 July 2011

சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்!

Text Resizer: Click for Resizer

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண்சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர்சூரியன் தனக்கு உரிமையான சொத்து என,கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன்செவ்வாய்சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறிஅதற்குரிய ஆவணங்களை தயார் செய்துஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும்,அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசிபிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும்மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கோடையினால் ஏற்படும் வறட்சிவெயில் கொடுமையினால் பலி,போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை.
(இன்னும் எது எதற்கெல்லாம் உரிமை கொண்டாட போகிறார்களோ! என்ன கொடுமை சார் இது.)

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.