Text Resizer: Click for Resizer




ஒவ்வொரு குழந்தைகளும் தமது பெயரை கடற்கரை மண்ணில் எழுதிப் பார்த்து ஆனந்தம் அடைவார்கள். ஆனால் கடற்கரை மண்ணில் எழுதப்படுபவைகள் அழிந்து போய்விடும். அரபு நாட்டு செல்வந்தர் ஒருவரின் பெயர் மட்டும் அழியாமல் இன்னும் அப்படியே உள்ளது என்றால் நம்புவீர்களா? இது மாயமோ மந்திரமோ அல்ல. ஹமாத் பின் ஹம்தான் அல் நஹ்யான் என்ற 63 வயதுடைய செல்வந்தர் ஒருவர் சொந்தமாக Al Futaisi என்ற தீவை விலைக்கு வாங்கியுள்ளார்.
Al Futaisi தீவில் 'HAMAD' என்ற தனது பெயரை 3 கிலோமீட்டர் நீளத்துக்கு பொறித்து வைத்துள்ளார். தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்துள்ளார். இந்த எழுத்துக்கள் தண்ணீரால் அழிக்கமுடியாதபடி எழுதப்பட்டுள்ளது.

இதனை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. ஹமாத், 'Rainbow Sheikh' என்ற பெயரால் அழைக்கப்படுவபர் என்பதுடன், சவூதி அரேபியாவை ஆளும் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவராவார். அண்மையில் இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார்.

அபுதாபியில் இவருக்கு ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை விட 64 மடங்கு பெரியது.
அதேவேளை இவர் மொரோக்கோவில் உள்ள பொது மருத்துவமனையில் உள்ள சிறுநீரகக்கல் சிகிச்சைப் பிரிவு ஆய்வு கூடத்திற்கு தொடர்ந்தும் நிதி உதவி செய்து வருகிறார் என்றும் மருத்துவத்திற்கு இவர் பெருங்கொடையாளி என்றும் குறிப்பிடப்படுகிறது.









No comments:
Post a Comment